பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ்: ஜிரி லெஹெக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
பிரிஸ்பேன்,
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா, பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் உடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் செட்டை 6-4 என்ற புள்ளிக்கணக்கில் ஜிரி லெஹெக்கா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட் 4-4 என சமனில் இருந்த போது காயம் காரணமாக டிமிட்ரோவ் வெளியேறினார். இதன் காரணமாக ஜிரி லெஹெக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
Related Tags :
Next Story