உலக செஸ் சாம்பியன்ஷிப்; குகேஷ் - லிரென் மோதிய 7வது சுற்று ஆட்டம் டிரா
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது.
சிங்கப்பூர்,
இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் நிறைவடைந்துள்ளது. முதலாவது சுற்றில் லிரெனும், 3-வது சுற்றில் குகேசும் வெற்றி பெற்றனர். மற்ற சுற்றுகள் டிராவில் முடிந்தது.
தற்போது இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியின் 7வது சுற்று ஆட்டம் இன்று நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் சுமார் 5 மணி நேரம் நடைபெற்றது. இறுதியில் இந்த ஆட்டம் டிரா ஆனது.
இதன் காரணமாக இருவரும் தற்போது தலா 3.5 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். முதலில் 7½ புள்ளியை எட்டும் வீரர் உலக சாம்பியன் பட்டத்தை வெல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story