புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்


புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் இன்று மோதல்
x

Image Courtesy: @tamilthalaivas / @ProKabaddi

தினத்தந்தி 1 Dec 2024 5:30 AM IST (Updated: 1 Dec 2024 5:30 AM IST)
t-max-icont-min-icon

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

நொய்டா,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் 3வது இடத்திலும், தபாங் டெல்லி 8வது இடத்திலும், தமிழ் தலைவாஸ் 9வது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 11வது இடத்திலும் உள்ளன.


Next Story