புரோ கபடி லீக்; தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
புனே,
11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் - தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் 4ம் இடத்திலும், தெலுங்கு டைட்டன்ஸ் 7ம் இடத்திலும், தமிழ் தலைவாஸ் 9ம் இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 10ம் இடத்திலும் உள்ளன.
Related Tags :
Next Story