பாரீஸ் ஒலிம்பிக்: தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான்..?


பாரீஸ் ஒலிம்பிக்: தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பாரா துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான்..?
x
தினத்தந்தி 12 July 2024 11:36 AM IST (Updated: 16 July 2024 5:22 PM IST)
t-max-icont-min-icon

33-வது ஒலிம்பிக் தொடர் இன்னும் 13 நாட்களில் கோலாகலமாக தொடங்க உள்ளது.

பாரீஸ்,

பழங்கால கிரேக்கத்தில் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்தது, ஒலிம்பிக் விளையாட்டு. அங்கு ஒலிம்பியா என்ற இடத்தில் ஜியஸ் கடவுளுக்கு மரியாதை செலுத்தும் ஒரு விழாவாக இது கொண்டாடப்பட்டது.

தற்போது 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போதே அதிகரித்துள்ளது.

இதில் தமிழகத்தை சேர்ந்த துப்பாக்கி சுடுதல் வீரர் பிரித்வி ராஜ் தொண்டைமான் ஷாட் கன் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இவரது தலைமையில் ஒலிம்பிக் தொடருக்கான 5 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் இளவரசர் என்று அறியப்படும் பிரித்வி ராஜ் தொண்டைமான் டிராப் ஷூட்டர் பிரிவில் இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். இவர் சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றுள்ளார்.

உலகக்கோப்பை ஷாட்கன் ஆடவர் டிராப் போட்டியில் வெண்கலப் பதக்கம் (இந்த போட்டியில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் பிரித்விராஜ் தொண்டைமான்) வென்றுள்ளார். தற்போது, பாரீஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

பிரித்விராஜ் தொண்டைமான் ஏற்கனவே உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள நிலையில், நடப்பு ஒலிம்பிக் போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி பதக்கம் வென்று இந்தியாவிற்கு மட்டுமல்லாது தமிழகத்திற்கும் பெருமை சேர்ப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Next Story