பாராஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்


பாராஒலிம்பிக்ஸ்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
x

image courtesy: AFP

தினத்தந்தி 1 Sep 2024 5:33 AM GMT (Updated: 1 Sep 2024 5:35 AM GMT)

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. பதக்கப்பட்டியலில் சீனா 17 தங்கம் உள்பட 36 பதக்கத்துடன் முதலிடம் வகிக்கிறது. இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கத்துடன் 22-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் 5-வது நாளான இன்று இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகளின் முழு விவரம் பின்வருமாறு:-

மதியம் 1.00 மணிக்கு - பாரா துப்பாக்கி சுடுதல் - கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று - சித்தார்த்த பாபு/ அவனி லெக்ரா

மதியம் 1:39 மணிக்கு - பாரா தடகளம் - பெண்கள் 1500 மீட்டர்- சுற்று 1 - ரக்ஷிதா ராஜு

மதியம் 2:00 மணிக்கு - பாரா துடுப்பு படகுப் போட்டி - கலப்பு இரட்டையர் ஸ்கல்ஸ் இறுதிப்போட்டி - அனிதா/ நாராயண கொங்கனபள்ளி

மதியம் 3:00 மணிக்கு - பாரா துப்பாக்கி சுடுதல் - - கலப்பு 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதி சுற்று - ஸ்ரீஹர்ஷா தேவரட்டி ராமகிருஷ்ணா

மதியம் 3:12 மணிக்கு - பாரா தடகளம் - ஆண்கள் ஷாட் புட் - இறுதிப்போட்டி - ரவி ரோங்காலி

இரவு 7:17 மணிக்கு - பாரா வில்வித்தை - ஆண்கள் தனிநபர் காம்பவுண்ட் ஓபன், 1/8 எலிமினேஷன் - ராகேஷ் குமார் - கென் ஸ்வாகுமிலாங் (இந்தோனேசியா)

இரவு 8:10 மணிக்கு - பாரா பேட்மிண்டன் - ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி - நிதேஷ் குமார் - டெய்சுகே புஜிஹாரா (ஜப்பான்)

இரவு 9:15 மணிக்கு - பாரா டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் - 16வது சுற்று - பவினாபென் படேல் - மார்தா வெர்டின் (மெக்சிகோ)

இரவு 10:40 மணிக்கு - பாரா தடகளம் - ஆண்கள் உயரம் தாண்டுதல் - இறுதிப் போட்டி - நிஷாத் குமார் மற்றும் ராம் பால்

இரவு 11:27 மணிக்கு - பாரா தடகளம் - பெண்கள் 200 மீட்டர் - இறுதிப்போட்டி - ப்ரீத்தி பால் (

(செப்டம்பர் 2) இரவு 12:15 மணிக்கு - பாரா டேபிள் டென்னிஸ் - பெண்கள் ஒற்றையர் - ரவுண்ட் ஆப் 16 - சோனல்பென் படேல் - ஆண்டேலா முஜினிக் வின்செடிக் (குரோஷியா)

இதில் தகுதி சுற்று போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த கட்ட போட்டிகளில் இன்று விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story