சர்வதேச பேட்மிண்டன்; சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென், சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
லக்னோ,
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, 119-ம் நிலை வீராங்கனையான சீனாவின் வூ லூவ் யுவை எதிர்கொண்டார்.
47 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-14, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வூ லூவ் யுவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் 21-6, 21-7 என்ற நேர் செட்டில் சிங்கப்பூரின் ஜியா ஹெங் ஜாசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
Related Tags :
Next Story