இந்திய ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
இன்று நடைபெறும் 2வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, ஜப்பானின் மனமி மிசுட்சு உடன் மோதுகிறார்.
புதுடெல்லி,
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி.ஜாதவ் உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தைவானின் சங் ஷுயோ-யுன் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பி.வி.சிந்து 21-14, 22-20 என்ற செட் கணக்கில் சங் ஷுயோ-யுனை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் 2வது சுற்று ஆட்டத்தில் பி.வி.சிந்து, ஜப்பானின் மனமி மிசுட்சு உடன் மோதுகிறார்.
Related Tags :
Next Story