பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்


பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெள்ளி வென்றார் சுஹாஸ் யதிராஜ்
x
தினத்தந்தி 2 Sep 2024 7:14 PM GMT (Updated: 3 Sep 2024 12:51 AM GMT)

சுஹாஸ் யதிராஜ் 2007-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரி ஆவார்.

பாரீஸ்,

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் நிலையில், ஆண்களுக்கான (எஸ்எல்4) தனிநபர் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பிரான்ஸ் வீரர் லூகாஸுக்கு எதிரான நேற்று (2-ம் தேதி) நடைபெற்ற போட்டியில், சுஹாஸ் யதிராஜ் 9 - 21, 13 - 21 என்ற நேர் செட்களில் வீழ்ந்தார். இதன்மூலம், பாரா ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெள்ளி வென்று சாதித்துள்ளார்.

இடது கணுக்காலில் குறைபாட்டுடன் பிறந்த சுஹாஸ் யதிராஜ் (41), 2007-ம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரி ஆவார். சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பதன் மூலம், பாரீஸ் பாரா ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிகளில் இந்தியா மொத்தம் 4 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story