கவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: மகளிர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி சாம்பியன்
இந்தியாவின் அஸ்வின் பொன்னப்பா , தனீஷா ஜோடி, சீன ஜோடியை எதிர்கொண்டது.
கவுகாத்தி,
அசாமின் கவுகாத்தி நகரில் இந்தியா சார்பில் கவுகாத்தி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 என்ற பேட்மிண்டன் போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியாவின் அஸ்வின் பொன்னப்பா , தனீஷா கிராஸ்டோ ஜோடி, சீனாவின் லி ஹுவா, வாங் ஜி ஜோடியை எதிர்கொண்டது.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய ஜோடி சிறப்பாக விளையாடியது . இதனால் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் அஸ்வின் பொன்னப்பா , தனீஷா கிராஸ்டோ ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
Related Tags :
Next Story