போட்டியின்போது காயமடைந்த குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி மரணம்


போட்டியின்போது காயமடைந்த குத்துச்சண்டை வீரர் ஜான் கூனி மரணம்
x

image courtesy:instagram/jhc_boxing

கடந்த 1-ம் தேதி நடைபெற்ற போட்டியில் காயமடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெல்பாஸ்ட்,

அயர்லாந்து குத்துச்சண்டை வீரரான ஜான் கூனி (வயது 28), கடந்த 1-ம் தேதி நடைபெற்ற பெதர்வெயிட் பட்டத்திற்கான போட்டியின் 9-வது சுற்றில் சக போட்டியாளர் தாக்கியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார். அதனால் அவரால் போட்டியை மேற்கொண்டு தொடர முடியவில்லை.

இதனையடுத்து போட்டி 9-வது சுற்றோடு நிறுத்தப்பட்டு ஜான் கூனி ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு தலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சரி செய்ய ஆபரேஷன் செய்யப்பட்டது.

இருப்பினும் ஒரு வார காலம் தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று மரணமடைந்தார். அவரது மரணம் குத்துச்சண்டை உலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story