வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் கிடைக்குமா? இன்று விசாரணை
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் வினேஷ் போகத் மேல் முறையீட்டில் கூறியுள்ளார்.
பாரீஸ்,
உடல் எடை பிரச்சினையால் ஒலிம்பிக் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதை எதிர்த்து பாரீசில் உள்ள சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றத்தின் தற்காலிக அமர்வு முன்பு அப்பீல் செய்தார்.
இறுதிப்போட்டிக்கு முன்பு வரை தனது எடை சரியாக இருந்ததால் வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார். அவரது அப்பீலை ஏற்றுக்கொண்டுள்ள நடுவர் நீதிமன்றம், வக்கீலை நியமித்து வாதாடும்படி அவரது தரப்பை அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.
Live Updates
- 9 Aug 2024 1:17 PM IST
வினேஷ் போகத் தனது ஓய்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்செய் சிங் வலியுறுத்தியுள்ளார்.
- 9 Aug 2024 10:26 AM IST
சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் இன்று மதியம் 1.30 மணிக்கு (இந்திய நேரப்படி) வினேஷ் போகத்தின் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் வினேஷ் போகத் சார்பாக பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகி வாதாடுகிறார்.