ஒலிம்பிக் மல்யுத்தம்: தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு


ஒலிம்பிக் மல்யுத்தம்: தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு
x

ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.

பாரீஸ்,

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர், நேற்று நடைபெறவிருந்த இறுதிப்போட்டியில் பங்கேற்பதாக இருந்தது. இறுதிப்போட்டியில் பங்கேற்றால் வினேஷ் போகத்திற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் உறுதியாகியிருக்கும்.

ஆனால், ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப்போட்டியில் இருந்து வினேஷ் போகத் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்க வீராங்கனை 50 கிலோ உடல் எடை கொண்டிருக்க வேண்டும். ஆனால், வினேஷ் போகத் 50 கிலோ 100 கிராம் உடல் எடை கொண்டிருப்பதாக கூறி அவர் இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதன் மூலம் அவரது பதக்க வாய்ப்பு பறிபோனது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் வினேஷ் போகத் 50 கிலோ மல்யுத்தத்தில் கடைசி இடம் பிடித்தார்.

இந்நிலையில், இறுதிப்போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார்.

தங்க பதக்கத்திற்கான இறுதிப்போட்டியை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ள வினேஷ் போகத், போட்டி நடத்தப்படவில்லை என்றால் தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார். வினேஷ் போகத் தாக்கல் செய்த முறையீட்டு மனு விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Next Story