பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதி


பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதி
x

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கிபாரீஸ் ஒலிம்பிக் தொடரின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றார். நடந்து வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன்படி மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் இன்று வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பெற்ற முதலாவது பதக்கம் இதுவாகும்.

இந்நிலையில், இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் தகுதிச்சுற்று போட்டியில் இந்திய வீரர் அர்ஜுன் பாபுதா பங்கேற்றார். இந்தப் போட்டியில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும்.

இதில் பாபுதா சிறப்பாக செயல்பட்டு 630.1 புள்ளிகள் பெற்று 7-வது இடம் பிடித்தார். இதன்மூலம் அவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றொரு இந்திய வீரரான சந்தீப் சிங் 12-வது (629.3 புள்ளிகள்) இடத்தைப் பிடித்து வெளியேறினார். நாளை மதியம் 3.30 மணியளவில் இறுதிப்போட்டி நடைபெறுகிறது.


Next Story