வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை.. சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டம்


தினத்தந்தி 7 Aug 2024 8:01 AM GMT (Updated: 7 Aug 2024 2:42 PM GMT)

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டிருப்பது இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

பாரீசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 50 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட அவர், இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார். அவர் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Live Updates

  • 7 Aug 2024 12:59 PM GMT

    நீர்ச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வினேஷ் போகத்தை சந்தித்த பி.டி. உஷா

  • 7 Aug 2024 11:47 AM GMT

    வினேஷ் போகத் தகுதி நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என சர்வதேச மல்யுத்த சங்கம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 100 கிராம் மட்டுமே எடை அதிகம் என்பதற்காக விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்க முடியாது, அப்படி வழங்கினால் மற்றவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளது.

  • 7 Aug 2024 11:42 AM GMT

    வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டது சதி வேலையாக இருக்கலாம் என இந்திய முன்னாள் குத்துச்சண்டை வீரரும், பா.ஜ.க. நிர்வாகியுமான விஜேந்தர் சிங் சந்தேகம் எழுப்பி உள்ளார். 

  • 7 Aug 2024 11:38 AM GMT

    மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு நடிகை சமந்தா ஆறுதல்

    நீங்கள் தனி ஆள் அல்ல. உங்களுக்கு மேல் ஒரு சக்தி எல்லாவற்றையும் பார்த்து கொண்டுள்ளது. உங்கள் உயர்வு தாழ்வுகள் அனைத்திலும் நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம். 



  • 7 Aug 2024 11:33 AM GMT

    விளையாட்டு கிராமத்தில் ஓய்வெடுக்கும் வினேஷ் போகத்

    வினேஷ் போகத் தகுதி நீக்கத்திற்கு பிறகு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் சிங் கூறியதாவது:-

    எங்களுக்கு நேரம் குறைவாகவே உள்ளது. எனினும், எங்களால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

    உடல் எடையை குறைப்பதற்காக வினேஷே போகத் இரவு முழுவதும் பயிற்சியில் ஈடுபட்டதால், நீர்ச்சத்து சற்று குறைந்துவிட்டது. இப்போது அவர் உடல் ஆரோக்கியத்துடன் விளையாட்டு கிராமத்தில் ஓய்வெடுத்து வருகிறார். அதிக எடை காரணமாக, பெண்கள் மல்யுத்தத்தில் முதல் தங்கப் பதக்கத்தை தவறவிட்டது நாட்டிற்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம். நமது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போட்டிகளுக்கு சிறப்பாக தயாராகி உள்ளனர். அவர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். 2 அல்லது 3 பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

  • 7 Aug 2024 11:12 AM GMT

    வினேஷ் போகத்தின் தகுதிநீக்கம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மத்திய அரசும், இந்திய ஒலிம்பிக் கமிட்டியும் வினேஷ் போகத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது - இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவர் பி.டி.உஷா 

  • 7 Aug 2024 10:31 AM GMT

    அரியானாவின் சார்க்கி-தாத்ரி பகுதியில் உள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் வீட்டிற்கு இன்று சென்ற பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.

  • 7 Aug 2024 10:08 AM GMT

    வினேஷ் போகத் தகுதி நீக்கம்; மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா விளக்கம்

    வினேஷ் போகத்தின் உடல் எடை 100 கிராம் அதிகமாக இருந்தது. இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்து வந்துள்ளார். ஒலிம்பிக் கமிட்டியிடம் நாங்கள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். 

  • 7 Aug 2024 9:34 AM GMT

    ஒலிம்பிக் தொடரில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்துக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் வேதனை அளிக்கிறது - கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா



  • 7 Aug 2024 9:13 AM GMT

    வினேஷ் போகத்திடம் தோல்வி அடைந்த கியூபா வீராங்கனை கஸ்மான் லோபஸ் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.


Next Story