பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் தோல்வி


பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் தோல்வி
x

கோப்புப்படம் AFP

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக் தோல்வியடைந்தார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 'நம்பர் ஒன்' வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து), சீனாவின் ஜெங் கின்வென்னுடன் மோதினார்.

இந்த போட்டியில் ஸ்வியாடெக் 2-6, 5-7 என்ற நேர் செட் கணக்கில் ஜெங் கின்வென்னிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் வெண்கலப் பதக்கத்துக்காக இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் இகா ஸ்வியாடெக், சுலோவேகியா வீராங்கனை அன்னா கரோலினா உடன் மோதுகிறார்.


Next Story