பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி


பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் இறுதிப்போட்டிக்கு தகுதி
x

image courtesy: PTI

மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் ஏமாற்றம் அளித்தார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 8-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீட்டர் பிஸ்டல் தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகளான மனு பாக்கர் மற்றும் இஷா சிங் கலந்து கொண்டனர்.

இதில் நடப்பு ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 வெண்கல பதக்கம் வென்று கொடுத்து அசத்திய மனு பாக்கர் இன்றும் சிறப்பாக செயல்பட்டார். முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் மனு பாக்கர் 2-வது இடம் பிடித்து அசத்தினார்.

இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அவர் 3-வது பதக்கத்தை சுடுவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே வேளை மற்றொரு இந்திய வீராங்கனையான இஷா சிங் 18-வது இடம்பிடித்து ஏமாற்றம் அளித்தார்.


Next Story