பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்


பாரீஸ் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனைகள் ஏமாற்றம்
x

image courtesy: AFP

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று போட்டி இன்று நடைபெற்றது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

7-வது நாளான இன்று நடைபெற்ற பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதி சுற்று போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிப்ட் கவுர் சம்ரா மற்றும் அஞ்சும் மோட்கில் கலந்து கொண்டனர். இதில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழலில் இந்திய வீராங்கனைகள் அஞ்சும் மோட்கில் 18-வது இடமும், சிப்ட் கவுர் சம்ரா 31-வது இடமும் பெற்று தோல்வியடைந்தனர்.

இதன் மூலம் இறுதிச்சுற்றுக்கு தகுதிபெறாமல் ஏமாற்றம் அளித்தனர்.


Next Story