பாரீஸ் ஒலிம்பிக்; பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எகிப்து வீரர் கைது


பாரீஸ் ஒலிம்பிக்; பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எகிப்து வீரர் கைது
x

கோப்புப்படம்

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எகிப்து மல்யுத்த வீரர் முகமது எல்சைட் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் (1 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளது. இந்நிலையில் எகிப்து நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரரான முகமது எல்சைட் தற்போதைய பாரீஸ் ஒலிம்பிக்கில் தொடக்க சுற்றிலேயே தோல்வியை தழுவினார்.

இந்நிலையில், பாரீசில் உள்ள ஓட்டலுக்கு சென்ற அவர் பெண் ஒருவரை தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்க உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், விளையாட்டில் பங்கேற்க வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று எகிப்து ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது.


Next Story