பாரீஸ் ஒலிம்பிக்: முதல் குரூப் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து


பாரீஸ் ஒலிம்பிக்: முதல் குரூப் சுற்று போட்டியில் வென்றார் பி.வி.சிந்து
x
தினத்தந்தி 28 July 2024 8:58 AM GMT (Updated: 28 July 2024 9:42 AM GMT)

பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் குரூப் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் இந்தியாவை சேர்ந்த 117 வீரர்களும் அடங்குவர். இந்நிலையில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இன்று நண்பகல் 12.50 மணிக்கு நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் குரூப் சுற்று போட்டியில் மாலத்தீவை சேர்ந்த பாத்திமா நபாஹா உடன் மோதினார்.

இப்போட்டியில் 21-9, 21-6 என்ற நேர் செட் கணக்கில் பாத்திமா நபாஹாவை வீழ்த்தி பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து வரும் 31-ம் தேதி பி.வி.சிந்து தனது இரண்டாவது ஆட்டத்தில் எஸ்தோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொள்கிறார்.

முன்னதாக பி.வி.சிந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கமும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story