மகளிர் ஆக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்


மகளிர் ஆக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்
x

image courtesy:twitter/@HockeyIndiaLeag

இறுதிப்போட்டியில் சூர்மா கிளப் - ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின.

ரூர்கேலா,

முதலாவது மகளிர் ஆக்கி இந்தியா லீக் ரூர்கேலாவில் நடைபெற்றது. 4 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சூர்மா கிளப் - ஒடிசா வாரியர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒடிசா வாரியர்ஸ் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலாவது மகளிர் ஆக்கி இந்தியா லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

ஒடிசா வாரியர்ஸ் தரப்பில் ருதுஜா பிசல் வெற்றிக்குரிய அந்த 2 கோல்களையும் அடித்து அசத்தினார். அவரே ஆட்ட நாயகியாகவும் தேர்வு செய்யப்பட்டார். சூர்மா கிளப் தரப்பில் பென்னி மட்டுமே ஒரு கோல் அடித்தார்.


Next Story