மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா


மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த இந்தியா
x

image courtesy: twitter/@TheHockeyIndia

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீபிகா 5 கோல்கள் அடித்து அசத்தினார்.

ராஜ்கிர்,

8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவையும், 2-வது ஆட்டத்தில் தென் கொரியாவையும் வீழ்த்தி இருந்தது.

இதனையடுத்து இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் தாய்லாந்துடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த இந்தியா 13-0 என்ற கணக்கில் தாய்லாந்தை ஊதித்தள்ளி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக தீபிகா 5 கோல்களும், பிரீத்து துபே, மனிஷா சவுஹான் மற்றும் லால்ரெம்சியாமி தலா 2 கோல்களும், பியூட்டி டங்டங் & நவ்னீத் கவுர் தலா 1 கோலும் அடித்தனர்.

இந்திய அணி தனது 4-வது ஆட்டத்தில் பலம் வாய்ந்த சீன அணியை நாளை எதிர்கொள்கிறது.


Next Story