புரோ ஆக்கி லீக்: அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றி

image courtesy: Hockey India twitter
நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின.
புவனேஸ்வர்,
6-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தொடரில் புவனேஸ்வரில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை பந்தாடி 4-வது வெற்றியை சுவைத்தது.
இந்திய அணி சார்பில், சஞ்ஜீப் நிலம் (14-வது நிமிடம்), மந்தீப் சிங் (24-வது நிமிடம்), அபிஷேக் (28-வது நிமிடம்), ஷாம்ஷேர் சிங் (34-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை நாளை எதிர்கொள்கிறது.
Related Tags :
Next Story