மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "இது ஒரு அபாரமான சாதனை... மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை வென்ற எங்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் போட்டியின் போது சிறப்பாக விளையாடினர். அவர்களின் வெற்றி பல வரவிருக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story