பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம்: முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங்


பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம்:  முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங்
x
தினத்தந்தி 11 July 2024 12:48 PM GMT (Updated: 16 July 2024 11:57 AM GMT)

பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம் என இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்சின் பாரீஸ் நகரில் வருகிற 26-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த நிலையில், பாரீஸ் எனது கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கலாம் என இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரீஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரீஸ் ஒலிம்பிக்கி போட்டியில் உள்ளது.

இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும் 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. என தெரிவித்தார்.

மன்பிரீத் சிங் தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியஅணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story