ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி


ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி; அரையிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி
x

Image Courtesy: @HockeyIndiaLeag / @TheHockeyIndia

ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது.

மஸ்கட்,

10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் இந்தியா, ஜப்பான், பாகிஸ்தான், மலேசியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தென்கொரியா, தாய்லாந்து, சீன தைபே, வங்காளதேசம், சீனா, ஓமன் அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்தன.

இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதியில் பாகிஸ்தான்-ஜப்பான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் 4-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற 2-வது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 7-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Next Story