நாட்டிற்காக விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - இளம் இந்திய ஆக்கி வீராங்கனை


நாட்டிற்காக விளையாட என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் - இளம் இந்திய ஆக்கி வீராங்கனை
x

image courtesy: twitter/@HockeyIndiaLeag

மகளிர் ஆக்கி இந்தியா லீக் தொடரில் வளர்ந்து வரும் வீராங்கனை விருதை சோனம் வென்றார்.

புதுடெல்லி,

சமீபத்தில் முடிவடைந்த முதலாவது மகளிர் ஆக்கி இந்தியா லீக் தொடரில் சூர்மா கிளப் அணியை வீழ்த்தி ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடி சூர்மா கிளப் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதில் அரியானைவை சேர்ந்த இளம் வீராங்கனை சோனம் (வயது 19) முக்கிய பங்கு வகித்தார். இதனால் இந்த தொடரின் 'வளர்ந்து வரும் வீராங்கனை விருது' அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் சோனம் சமீபத்திய அளித்த பேட்டியில், "போட்டி தொடங்குவதற்கு முன்பு, நான் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அணியில் அனுபவம் வாய்ந்தவர்கள் நிறைய பேர் இருந்தனர். அதன் காரணமாக இடம் கிடைக்காது என்று நினைத்தேன். எங்கள் அணி அதிகமாக தாக்குதல் பாணியை கொண்டிருந்தது. அணிக்கு என்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியும். எனவே என்னால் முடிந்தவரை பல கோல்களை அடித்த முயற்சித்தேன். மேலும் நாட்டிற்காக விளையாடுவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்" என்று கூறினார்.


Next Story