ஆக்கி இந்தியா லீக்: கலிங்கா லான்சர்ஸ் அணியை வீழ்த்திய சூர்மா கிளப்


ஆக்கி இந்தியா லீக்: கலிங்கா லான்சர்ஸ் அணியை வீழ்த்திய சூர்மா கிளப்
x

image courtesy:twitter/@HockeyIndiaLeag

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் - சூர்மா ஆக்கி கிளப் அணிகள் மோதின.

ரூர்கேலா,

8 அணிகள் இடையிலான ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சூர்மா ஆக்கி கிளப் - வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சூர்மா ஆக்கி கிளப் அணி 5-3 என்ற கோல் கணக்கில் கலிங்கா லான்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

சூர்மா கிளப் தரப்பில் ஹர்மன்ப்ரீத் சிங் 2 கோல்களும், பிரப்ஜோத் சிங், நிக்கோலஸ் கீனன் மற்றும் மனீந்தர் சின்ஹ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். கலிங்கா லான்சர்ஸ் தரப்பில் தில்ப்ரீத் சிங், பிரிங்க்மேன் மற்றும் குர்சாஹிப்ஜித் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.


Next Story