ஆக்கி இந்தியா லீக்: இறுதிப்போட்டி விவரம்

image courtesy: twitter/@HockeyIndiaLeag
இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.
ரூர்கேலா,
8 அணிகள் பங்கேற்றுள்ள 6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ், தமிழ்நாடு டிராகன்ஸ், சூர்மா ஆக்கி கிளப் மற்றும் ஐதராபாத் டூபான்ஸ் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
அரையிறுதியில் தமிழ்நாடு டிராகன்சை வீழ்த்தி ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியும், சூர்மா ஆக்கி கிளப் அணியை வீழ்த்தி ஐதராபாத் டூபான்ஸும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில் இன்றிரவு 8.15 மணிக்கு நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் ஐதராபாத் டூபான்ஸ் - ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் பலப்பரீட்சை நடத்த உள்ளன.
Related Tags :
Next Story