ஆக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராசை பந்தாடி 4-வது வெற்றியை பதிவு செய்த பெங்கால் டைகர்ஸ்
இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ்- வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
ரூர்கேலா,
6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் - உ.பி. ருத்ராஸ் அணிகள் மோதின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெங்கால் டைகர்ஸ் 5-3 என்ற கோல் கணக்கில் உ.பி. ருத்ராசை பந்தாடி 4-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
பெங்கால் டைகர்ஸ் தரப்பில் ஜுக்ராஜ் சிங் 2 கோல்களும், சுக்ஜீத் சிங், அபிஷேக் மற்றும் போக்கார்டு ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். உ.பி. ருத்ராஸ் தரப்பில் சாம் வார்டு 2 கோல்களும், ஹர்டிக் சிங் ஒரு கோலும் அடித்தனர்.
இதில் இன்று நடைபெறுகின்ற ஆட்டத்தில் டெல்லி எஸ்.ஜி. பைபர்ஸ்- வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story