உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி| world champion Argentina team

கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி... பினராயி விஜயன் பெருமிதம்


கேரளா வருகை தரும் உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி... பினராயி விஜயன் பெருமிதம்
x

கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடுகிறது

திருவனந்தபுரம்,

உலக சாம்பியன் அர்ஜென்டினா கால்பந்து அணி அடுத்த ஆண்டு கேரளா செல்ல விருப்பம் தெரிவித்துள்ளது. கேரளாவில் அடுத்த வருடம் நடைபெறும் சர்வதேச போட்டியில் மெஸ்சியுடன் கூடிய அர்ஜென்டினா அணி கலந்து கொண்டு விளையாடுகிறது

இந்த நிலையில் , அர்ஜென்டினா அணி கேரளா வருவது குறித்து அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியிருப்பதாவது ,

உலக சாம்பியன் அர்ஜென்டினா அணி அடுத்த ஆண்டு கேரளா வருகிறது. இதனால் கேரளா வரலாறு படைக்க உள்ளது. மாநில அரசின் முயற்சி மற்றும் அர்ஜென்டினா அணியின் ஆதரவின் காரணமாக இந்த கனவு நனவாகி உள்ளது. சாம்பியன்களை வரவேற்கவும், கால்பந்தின் மீதான நமது அன்பைக் கொண்டாடவும் தயாராகுவோம். என தெரிவித்துள்ளார்.

மெஸ்சி கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் விளையாடினார். கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் ஸ்டேடியத்தில் அர்ஜென்டினா அணி வெனிசுலாவை எதிர்கொண்டது. இந்த சர்வதேச நட்பு ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story