ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் அதிக கோல்கள்.. ரொனால்டோ நசரியாவை முந்திய எம்பாப்பே

image courtesy:twitter/@realmadriden
ரியல் மாட்ரிட் அணியில் நடப்பு சீசனில் அறிமுகம் ஆன எம்பாப்பே இதுவரை 31 கோல்கள் அடித்துள்ளார்.
மாட்ரிட்,
லா லீகா கால்பந்து தொடரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லார்ரியல் அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் தரப்பில் நட்சத்திர வீரர் எம்பாப்பே 2 கோல்களையும் அடித்தார். வில்லார்ரியல் தரப்பில் ஜுவான் போய்த் மட்டுமே ஒரு கோல் அடித்தார்.
இந்த 2 கோல்களையும் சேர்த்து நடப்பு சீசனில் எம்பாப்பே அடித்த கோல்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது. இதன் மூலம் ரியல் மாட்ரிட் அணிக்காக அறிமுக சீசனில் அதிக கோல் அடித்த வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த பிரேசில் முன்னாள் கால்பந்து வீரரன ரொனால்டோ நசரியாவை (30 கோல்கள்) பின்னுக்கு தள்ளி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
அந்த பட்டியல்:
1. இவான் ஜமோரானோ - 37 கோல்கள்
2. கிறிஸ்டியானோ ரொனால்டோ/ரூட் வான் நிஸ்டெல்ரூய் - 33 கோல்கள்
3. எம்பாப்பே - 31 கோல்கள்