லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி


லா லிகா கால்பந்து:  ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி பார்சிலோனா அபார வெற்றி
x

Image : @FCBarcelona

தொடக்கம் முதல் பார்சிலோனா அணி ஆதிக்கம் செலுத்தியது.

மாட்ரிட்,

20 முன்னணி கிளப் அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்

இந்த தொடரில் இந்திய நேரப்பபடி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பார்சிலோனா - ரியல் மாட்ரிட் அணிகள் மோதின.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் பார்சிலோனா அணி ஆதிக்கம் செலுத்தியது . இதனால் ஆட்ட நேர முடிவில் 4-0 என்ற கணக்கில் பார்சிலோனா அணி வெற்றி பெற்றது . பார்சிலோனா அணியில் ராபர்ட் லெவண்டஸ்கி 2 கோல் , லாமின் யமால் , ராபின்ஹா ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.


Next Story