ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூருவை வீழ்த்திய பஞ்சாப் எப்.சி


ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; பெங்களூருவை வீழ்த்திய பஞ்சாப் எப்.சி
x

Image Courtesy: @RGPunjabFC / @IndSuperLeague

தினத்தந்தி 1 Feb 2025 2:00 PM (Updated: 1 Feb 2025 2:00 PM)
t-max-icont-min-icon

இன்று நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் முகமதின் - மோகன் பகான் அணிகள் ஆடி வருகின்றன .

புதுடெல்லி ,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

இதில் டெல்லியில் மாலை 5 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பஞ்சாப் எப்.சி - பெங்களூரு எப்.சி அணிகள் மோதின. இந்த போட்டியின் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல்கள் அடித்தனர். இறுதிவரை பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தி பஞ்சாப் எப்.சி திரில் வெற்றி பெற்றது.

தொடர்ந்து கொல்கத்தாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில் முகமதின் - மோகன் பகான் அணிகள் ஆடி வருகின்றன .


Next Story