ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; முகமதின் அணியை வீழ்த்திய மும்பை சிட்டி எப்.சி


ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர்; முகமதின் அணியை வீழ்த்திய மும்பை சிட்டி எப்.சி
x

Image Courtesy: @MumbaiCityFC / @IndSuperLeague

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா ,

13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முகமதின் எஸ்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கஎடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி முடிந்த்து. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் அபாரமாக செயல்பட்ட மும்பை ஆட்டத்தின் 49வது நிமிடத்தில் கோல் அடித்து முன்னிலை பெற்றது.

இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு இறுதி வரை பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்தி மும்பை சிட்டி எப்.சி வெற்றி பெற்றது.


Next Story