ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்: பெங்களூருவை வீழ்த்தி திரில் வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர் எப்.சி
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
மும்பை,
13 அணிகளுக்கு இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜார்கண்டில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்திலேயே பெங்களூரு முதல் கோல் அடித்து ஆட்டத்தில் 1-0 என முன்னிலை பெற்றது. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் 1-0 என பெங்களூரு முன்னிலை பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டன.
ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் ஒரு கோல் அடித்து 1-1 சமனுக்கு கொண்டு வந்தது. இதையடுத்து இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.
இதையடுத்து பெங்களூரு அணியினர் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் அணி திரில் வெற்றி பெற்றது.