ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப்  வெற்றி
x
தினத்தந்தி 15 Sept 2024 10:38 PM IST (Updated: 16 Sept 2024 3:37 PM IST)
t-max-icont-min-icon

ஐ.எஸ்.எல்.கால்பந்து தொடர் கடந்த 13ம் தேதி தொடங்கியது.

கொச்சி,

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கொல்கத்தாவில் கடந்த 13ம் தேதி தொடங்கியது.இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி, சென்னையின் எப்.சி., பெங்களூரு எப்.சி., ஈஸ்ட் பெங்கால், எப்.சி. கோவா, ஐதராபாத், ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட், நார்த் ஈஸ்ட் யுனைடெட், ஒடிசா எப்.சி., பஞ்சாப் எப்.சி. மற்றும் புதிய வரவான முகமைதன் ஸ்போர்ட்டிங் கிளப் என 13 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பஞ்சாப் அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பஞ்சாப் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியில் லூகா மஜ்சென், பிலிப் ஆகியோர் கோல் அடித்தனர். கேரளா அணியில் ஜிமினெஸ் கோல் அடித்தார்.


Next Story