ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் இன்று மோதல்
x

இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஒடிசா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று ஒடிசாவில் நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதுகின்றன . இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.

ஒடிசா அணி 4 ஆட்டங்களில் ஒரு வெற்றி, ஒரு டிரா, 2 தோல்வி என புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. ஈஸ்ட் பெங்கால் 5 ஆட்டங்களில் ஒரு போட்டியிலும் வெற்றி பெறாமல் 13வது இடத்தில் உள்ளது.


Next Story