ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - ஒடிசா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை சிட்டி - ஒடிசா ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

மும்பை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் மும்பையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா எப்.சி அணிகள் மோதின.

இதில் ஒடிசா எப்.சி அணி சார்பில் ராய் கிருஷ்ணா ஆட்டத்தில் 14-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். மும்பை சிட்டி அணி சார்பில் நிகோஸ் கரேலிஸ் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. இதையடுத்து மும்பை சிட்டி எப்.சி - ஒடிசா எப்.சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story