ஐ.எஸ்.எல். கால்பந்து; முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ்


ஐ.எஸ்.எல். கால்பந்து; முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்திய கேரளா பிளாஸ்டர்ஸ்
x

Image Courtesy: @KeralaBlasters / @IndSuperLeague

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

கொல்கத்தா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தின் முகமதின் எஸ்.சி - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் முகமதின் எஸ்.சி அணி ஒரு கோல் அடித்தது. இதன் காரணமாக முதல் பாதி ஆட்டம் முடிவில் 1-0 என முகமதின் எஸ்.சி அணி முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதியில் கேரளா அணியினர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அபாரமாக செயல்பட்ட கேரளா அணியினர் அடுத்தடுத்து 2 கோல்களை அடித்து முன்னிலை பெற்றனர். இதையடுத்து இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் முகமதின் எஸ்.சி அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றீ பெற்றது.


Next Story