ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை வீழ்த்தி ஜாம்ஷெட்பூர் எப்.சி. வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

ஜாம்ஷெட்பூர்,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஜாம்ஷெட்பூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. - ஐதராபாத் எப்.சி. அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணி சார்பில் ரெய் தச்சிகாவா (29-வது நிமிடம்), ஜோர்டான் முரே (44-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். ஐதராபாத் எப்.சி. அணி சார்பில் சிஒய் கோடார்டு (50-வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story