ஐ.எஸ்.எல். கால்பந்து: பஞ்சாப் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர்
11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
ராஞ்சி ,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜார்கண்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் எப்.சி - பஞ்சாப் எப்.சி அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்தன. இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜாம்ஷெட்பூர் அணி மேலும் ஒரு கோல் அடித்து அசத்தியது.
இறுதியில் இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் எப்.சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜாம்ஷெட்பூர் எப்.சி அசத்தல் வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story