ஐ.எஸ்.எல்.கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து: பஞ்சாப் அணியை வீழ்த்தி கோவா வெற்றி
x
தினத்தந்தி 6 Nov 2024 9:49 PM IST (Updated: 6 Nov 2024 9:51 PM IST)
t-max-icont-min-icon

கோவா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடியது.

கோவா,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கோவாவில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் கோவா - பஞ்சாப் அணிகள் மோதின .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடியது. இதனால் ஆட்ட நேர முடிவில் கோவா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது . கோவா அணியில் அர்மண்டோ சதிக் , ஐகேர் ஆகியோர் கோல் அடித்தனர் . பஞ்சாப் அணியில் ஆஸ்மிர் சுஜிக் கோல் அடித்தார்.


Next Story