கோபா அமெரிக்க கால்பந்து: அரையிறுதியில் உருகுவே - கொலம்பியா அணிகள் நாளை மோதல்


கோபா அமெரிக்க கால்பந்து: அரையிறுதியில் உருகுவே  - கொலம்பியா அணிகள் நாளை மோதல்
x
தினத்தந்தி 10 July 2024 9:18 AM GMT (Updated: 10 July 2024 9:20 AM GMT)

முதல் அரையிறுதி ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது

நியூ ஜெர்ஸி,

48-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இந்த தொடரின் லீக், , காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜெண்டினா, கனடா, உருகுவே, கொலம்பியா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இதில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் கனடா அணியை வீழ்த்தி அர்ஜெண்டினா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நாளை நடைபெற உள்ள 2வது அரையிறுதியில் உருகுவே - கொலம்பியா அணிகள் மோத உள்ளன . இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.


Next Story