கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா


கோபா அமெரிக்க கால்பந்து: பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறிய கொலம்பியா
x
தினத்தந்தி 8 July 2024 12:05 PM GMT (Updated: 8 July 2024 12:16 PM GMT)

அரையிறுதியில் கொலம்பியா - உருகுவே அணியுடன் மோத உள்ளது.

லாஸ்வேகஸ்,

48-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை லாஸ்வேகசில் கால்இறுதியின் கடைசி ஆட்டத்தில் கொலம்பியா - பனாமா அணிகள் மோதின.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொலம்பியா 5-0 என்ற கோல் கணக்கில் பனாமாவை பந்தாடி அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் உருகுவே அணி, கொலம்பியாவை சந்திக்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா, கனடாவுடன் மோத உள்ளது.


Next Story