மகளிர் பிரீமியர் லீக்; ரூ. 1.60 கோடிக்கு ஏலம் போன தமிழக வீராங்கனை


மகளிர் பிரீமியர் லீக்; ரூ. 1.60 கோடிக்கு ஏலம் போன தமிழக வீராங்கனை
x

Image Courtesy: @mipaltan / @wplt20

மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான மினி ஏலத்தில் தமிழக வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது.

பெங்களூரு,

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) சார்பில் மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்) 2025 தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் பெங்களூரில் இன்று நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அணிகள் முக்கிய வீராங்கனைகளை தக்க வைத்துள்ளன. எனவே, 19 இடங்களுக்கு மட்டுமே ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மினி ஏலத்தில் 16 வயது தமிழக விக்கெட் கீப்பர் வீராங்கனை ஜி கமலினியை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி வாங்கியுள்ளது. முன்னதாக ஏலத்தில் கமலினிக்கு ரூ.10 லட்சம் அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை ரூ.1.60 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்துள்ளது.

இதேபோல் சிம்ரன் ஷேக்கை ரூ. 1.90 கோடிக்கும், டியான்ட்ரா டாட்டினை ரூ 1.70 கோடிக்கும் குஜராத் ஜெயண்ட்ஸ் வாங்கியுள்ளது. ஐ.பி.எல் போன்று மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்த பி.சி.சி.ஐ சார்பில் மகளிர் பிரீமியர் லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தற்போது அதிக வரவேற்பு அதிகரித்து வருகிறது.



Next Story