மகளிர் பிரீமியர் லீக்: ஹர்லீன் தியோல் அதிரடி.. டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி


மகளிர் பிரீமியர் லீக்: ஹர்லீன் தியோல் அதிரடி.. டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் வெற்றி
x

image courtesy:twitter/@wplt20

குஜராத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 70 ரன்கள் அடித்தார்.

லக்னோ,

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மெக் லானிங் 92 ரன்கள் குவித்தார். குஜராத் தரப்பில் மெக்னா சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 178 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு பெத் மூனி - ஹர்லீன் தியோல் இணை சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தனர். 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 178 ரன்கள் அடித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 70 ரன்களும், பெத் மூனி 44 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் ஷிகா பாண்டே மற்றும் ஜெஸ் ஜான்சன் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.


Next Story