மகளிர் கிரிக்கெட்; இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் - ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது.
மெல்போர்ன்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் பிரிஸ்பேனிலும், 3வது ஆட்டம் பெர்த்திலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அலிசா ஹீலி காயம் அடைந்துள்ளதால் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. அவரது உடல்நிலையை பொறுத்து நியூசிலாந்து தொடரில் இடம் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிக்கு துணை கேப்டனாக தஹ்லியா மெக்ராத் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் கேப்டன் யார் என்று இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஜார்ஜியா வோல் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மட்டும் இடம் பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய மகளிர் அணி விவரம்; டார்சி ப்ரவுன், ஆஷ்லே கார்ட்னெர், கிம் கார்த், அலனா கிங், போப் லிட்ச்பீல்ட், தஹ்லியா மெக்ராத் (துணை கேப்டன்), சோபி மோலினக்ஸ், பெத் மூனி, எல்லிஸ் பெரி, மேகன் ஷட், அன்னாபெல் சதர்லெண்ட், ஜார்ஜியா வோல் (*இந்தியாவுக்கு எதிரான தொடர் மட்டும்), அலிசா ஹீலி (* நியூசிலாந்து தொடருக்கு மட்டும், உடல்தகுதியை பொறுத்து).