யாரென்று தெரிகிறதா? 20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் 'ப்ரப்போஸ்' செய்த ரசிகை - வைரல் வீடியோ


யாரென்று தெரிகிறதா? 20 ஆண்டுகளுப்பிறகு ஜாகீர்கானுக்கு மீண்டும் ப்ரப்போஸ் செய்த ரசிகை - வைரல் வீடியோ
x
தினத்தந்தி 15 March 2025 11:47 AM (Updated: 15 March 2025 12:31 PM)
t-max-icont-min-icon

20 ஆண்டுகளுக்கு முன் ரசிகை ஒருவர் மைதானத்தில் பதாகையை ஏந்திய படி ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்திருந்தார்.

லக்னோ,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

இந்த சீசனுக்கான லக்னோ அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது லக்னோ அணியின் பயிற்சி முகாமில் ஜாகீர் கான் இணைந்து வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

முன்னதாக லக்னோ அணியின் பயிற்சி முகாமில் ஜாகீர் இணைய வந்தபோது அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அங்கு ரசிகை ஒருவர் கையில் 'ஜாகீர் ஐ லவ் யூ' என்ற பதாகையை ஏந்திய படி ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்தார்.

இதே ரசிகை கடந்த 2005-ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியின்போது இதே போல் பதாகையை ஏந்தி ஜாகீர் கானுக்கு ப்ரப்போஸ் செய்தார்.அந்த தருணத்தில் ஜாகீர்கான் மற்றும் அந்த ரசிகை மாறி மாறி பறக்கும் முத்தங்களை பறக்க விட்டது மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.

இந்நிலையில் அதே ரசிகை 20 வருடங்கள் கழித்து மீண்டும் அதேபோல் ஜாகீர்கானுக்கு ப்ரப்போஸ் செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை லக்னோ அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Next Story