வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; வங்காளதேச முன்னணி வீரர் விலகல்
வங்காளதேசம் - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்குகிறது.
டாக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டெஸ்ட் போட்டிகள் அடுத்த மாதம் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் அடுத்த மாதம் 8ம் தேதி தொடங்குகின்றன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் வங்காளதேச முன்னணி வீரரான முஷ்பிகுர் ரஹீம் இடம் பெறமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் வங்காளதேச கேப்டன் ஷாண்டோவும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறமாட்டார் என தெரிகிறது. முஷ்பிகுர் மற்றும் ஷாண்டோ இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் காயம் அடைந்தனர்.
இதனால் அவர்கள் இருவரும் தற்போது நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம்பெறவில்லை. அவர்கள் காயம் குணமடைய இன்னும் ஒருசில மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெறமாட்டார்கள் என கூறப்படுகிறது.